டிரம்புக்குத் தடை விதித்த அமைச்சருக்கு மிரட்டல்
அறிவிப்பு வெளியிட்டதுமுதல் தொடர் மிரட்டல்களை எதிர்கொண்டு வருவதாக ஷென்னா பெலோஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் அமெரிக்கா அதிபர் டிரம்ப்புக்குத் தடை விதித்த மாகாண அமைச்சருக்கு டிரம்ப்பின் ஆதரவாளர்களால் தொடர் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட டொனால்ட் டிரம்ப்புக்கு மேய்ன் மாகாண அரசு தடை விதித்தது.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அந்த மாகாண அமைச்சர் ஷென்னா பெலோஸ் அரசியலமைப்பின் சட்டப் பிரிவின்கீழ் இந்தத் தடையை அறிவித்தார்.
Advertisement
அறிவிப்பு வெளியிட்டதுமுதல் தொடர் மிரட்டல்களையும் வலைதளங்களில் அவரை மனிதாபிமானற்ற ஃபேக் படங்களும் பதிவுகளும் வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் அடுத்த நிலையாக, அவசர உதவி எண்ணுக்கு ஒருவர் அழைத்து மான்செஸ்டரில் உள்ள ஒரு வீட்டை உடைத்து தான் உள்நுழைந்துள்ளதாகத் தகவல் கொடுத்துள்ளார்.
விரைந்து சென்ற அவசர உதவி அலுவலர்கள் மற்றும் வாகனங்கள் அது பொய்யான தகவல் எனத் தெரிய வந்துள்ளது. அந்த சமயத்தில் ஷென்னா விடுமுறைக்காக வெளியே சென்றுள்ளார். வீடு பூட்டப்பட்டிருந்தது.
அமைச்சரின் முகவரி வலைதளங்களில் அவருக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்டு பகிரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர், “நான் வித்தியாசமாக எதுவும் செய்யவில்லை. அரசியலமைப்பை, விதிகளைக் காக்கும் எனது பணியைச் செய்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தரப்பு இந்தத் தடை விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.