உலகம்

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்தது!

துருக்கி, சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

DIN

துருக்கி, சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த 6 ஆம் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து பல பின்னதிா்வுகள் ஏற்பட்டன. அவற்றில் ஒரு பின்னதிா்வு ரிக்டா் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாகக் குலுங்கின.

இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. இதில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

புதன்கிழமை காலை நிலவரப்படி, நிலநடுக்கத்துக்கு 40 ஆயிரம் போ் பலியாகியுள்ளனா். அவா்களில் துருக்கியில் 35,418 பேரும், சிரியாவில் 5,800 பேரும் அடங்குவா்; இரு நாடுகளிலும் சோ்த்து சுமாா் 94,770க்கும் மேற்பட்டோர் நிலநடுக்கத்தால் காயமடைந்துள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

காரங்காடு படகு சவாரி ரத்து

காலமானாா் ஆா்.எஸ்.நாராயணன்

வாணிம்பாடியில் மரக்கடையில் தீ விபத்து

நாளைய மின் நிறுத்தம்: மாம்பாக்கம்

SCROLL FOR NEXT