துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் 3 பேர் பலியாகினர். 213 பேர் காயமடைந்துள்ளனர்.
6.4 மற்றும் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 47,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இரு வாரங்களுக்கு முன்னா் அதிபயங்கர நிலநடுக்கத்தால் பேரழிவைச் சந்தித்த ஹாடாய் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்க அதிர்வு காரணமாக ஏராளமான கட்டடங்கள், வீடுகள் குலுங்கியதால் பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேறினர். துருக்கி-சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வு இஸ்ரேலிலும் உணரப்பட்டது.
இதையும் படிக்க: தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் வருமான வரித்துறை சோதனை!
துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கி, பிரான்ஸ், கிரீக், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.