உலகம்

விமான டிக்கெட் இருந்தால் போதும் விசா தேவையில்லை.. எங்கு? எதற்கு? எப்படி?

"உங்கள் டிக்கெட் தான் உங்கள் விசா" என்ற திட்டத்தின் கீழ் 96 மணி நேரம் (4 நாள்கள்) சவுதி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வரலாம் என்ற புதிய சேவை திட்டத்தை சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

DIN


"உங்கள் டிக்கெட் தான் உங்கள் விசா" என்ற திட்டத்தின் கீழ் 96 மணி நேரம் (4 நாள்கள்) சவுதி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வரலாம் என்ற புதிய சேவை திட்டத்தை சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சவுதி அரேபிய விமான நிறுவனமான சவுதியா, விமான டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் அதிகபட்சம் நான்கு நாள்களுக்கு (96 மணிநேரம்) சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உம்ரா, ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியா வருபவர்களுக்கு இந்த புதிய திட்டம் பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த திட்டம் குறித்து சவுதியாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சவுதி ஏர்லைன்ஸில் பயணிகள் ஆன்லைனில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, ​​அவர்களுக்கு விசா தேவையா இல்லையா என்று கேட்கப்படும். விசா தேவைப்படுபவர்கள் ஆம் என்று குறிப்பிட்டால் போதும் விமான டிக்கெட்டுடன் விசாவும் சேர்ந்து வந்துவிடும். 

"உங்கள் டிக்கெட் தான் உங்கள் விசா" என்ற திட்டத்தின் புதிய வகை விசாவைப் பயன்படுத்தி ஜித்தா விமான நிலையம் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் நீங்கள் இறங்கலாம். பயணங்களை முடித்துக்கொண்டு உங்களுக்கு வசதியான விமான நிலையத்தில் இருந்து தாயகம் திரும்பலாம். 

டிக்கெட் வாங்கும்போது வேறு கட்டணங்கள் எதுவும் செலுத்தாமல் சுற்றுலா விசா வழங்கும் சேவை விரைவில் தொடங்கப்படும்.

நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூண்டி ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரி ஆழப்படுத்தும் பணி

மகாராஜபுரம் சுடலைமாட சாமி கோயில் கும்பாபிஷேக விழா

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

SCROLL FOR NEXT