டோங்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிவு
டோங்காவின் வடமேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டோங்கா: டோங்காவின் வடமேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டோங்காவின் வடமேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 10:27:43 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 225 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களோ, பொருட்சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.