உலகம்

ஆப்கனில் அழகு நிலையங்கள் நடத்த பெண்களுக்குத் தடை!

ஆப்கானிஸ்தானில் அழகு நிலையங்கள் நடத்த பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

DIN

ஆப்கானிஸ்தானில் அழகு நிலையங்கள் நடத்த பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அங்கு பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்கள் கல்வி பயில, வேலைக்குச் செல்ல, வெளிநாடுகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்கள் நடத்த தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். 

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களால் நடத்தப்படும் அனைத்து அழகு நிலையங்களும் உடனடியாக தடை செய்யப்படுகிறது. அனைவரும் இந்த உத்தரவைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களின் பெயரில் உள்ள அழகு நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது அந்த நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவது மேலும் அவர்களின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT