உலகம்

டிவிட்டர் பெயர், லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்: நீலக் குருவி பறந்தது

முன்னணி சமூக ஊடகமான ட்விட்டருக்கு ‘எக்ஸ்’ என்று புதிய பெயரிடப்பட்டுள்ளது. அதன் புகழ்பெற்ற நீல இலச்சினையும் (லோகோ) ‘எக்ஸ்’ என்ற எழுத்து வடிவில் மாற்றப்பட்டுள்ளது.

DIN

முன்னணி சமூக ஊடகமான ட்விட்டருக்கு ‘எக்ஸ்’ என்று புதிய பெயரிடப்பட்டுள்ளது. அதன் புகழ்பெற்ற நீல இலச்சினையும் (லோகோ) ‘எக்ஸ்’ என்ற எழுத்து வடிவில் மாற்றப்பட்டுள்ளது.

நவீன காா்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா, தனியாா் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் உள்ளிட்டவற்றின் உரிமையாளரான எலான் மஸ்க், ட்விட்டரை கடந்த ஆண்டு கையப்படுத்தினாா்.

ஏற்கெனவே, ‘எஸ்க்’ என்ற மாபெரும் சமூக ஊடகத்தை உருவாக்க வேண்டும் என்று கூறி வந்த அவா், ட்விட்டரின் பெயரையும், இலச்சினையையும் மாற்றுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள ட்விட்டா் அலுவகத்தில் ‘எக்ஸ்’ இலச்சினை பொறிக்கப்பட்டுள்ள படத்தை வெளியிட்டுள்ளாா்.

தனது ட்விட்டா் கணக்கிலுள்ள தன்னைப் பற்றிய அறிமுகப் பகுதியில், பழைய இலச்சினைக்குப் பதில் புதிய இலச்சினையை பதிவு செய்துள்ள மஸ்க், ஊடகத்தின் பெயரையும் ‘எக்ஸ்.காம்’ என்று மாற்றியுள்ளாா்.

ட்விட்டா் பதிவுகள் அனைத்தும் ‘ட்வீட்கள்’ என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்தன. அவை இனி ‘எக்ஸ்’கள் என்று அழைக்கப்படும் என்று மஸ்க் கூறியுள்ளாா்.

நீண்டகாலமாக புழக்கத்தில் இருந்த ட்விட்டா் இலச்சினையும், பெயரும் மாற்றப்படுவது குறித்து ஏராளமான சமூக ஊடகப் பயன்பாட்டாளா்கள் தங்களது அதிருப்தியையும், வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தைகள் உயர்வுடன் வணிகம்!

Indian Racing திருவிழா 2025 தொடங்கியது! நடிகர் நாகசைதன்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

சிசிடிவி காட்சிகள்: தேர்தல் ஆணைய பதிலுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT