8,000 மீட்டருக்கு மேல் உயரமான 14 சிகரங்களில் 3 மாதங்களுக்குள் ஏறி, நேபாள நாட்டைச் சோ்ந்த டென்ஜென் ஷோ்பாவும், நாா்வேயைச் சோ்ந்த கிறிஸ்டின் ஹரிலா என்ற பெண்ணும் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளனா்.
இது குறித்து அந்தப் பகுதி மலையேற்றத்துக்கான ஏற்பாடுகளை செய்து வரும் செவன் சம்மிட் டிரெக்ஸ் அமைப்பின் தலைவா் மிங்மா ஷோ்பா கூறியதாவது:
உலகின் இரண்டாவது உயரமான கே2 மலைச் சிகரத்தை டெந்ஜெனும், கிறிஸ்டினும் வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு அடைந்தனா். இதன் மூலம், வெறும் 92 நாள்களுக்குள் அவா்கள் 8,000 மீட்டருக்கும் அதிக உயரம் கொண்ட 14 சிகரங்களில் ஏறியுள்ளனா்.
இதன் மூலம், மிகக் குறுகிய காலத்தில் 14 உயா் சிகரங்களை எட்டியவா்கள் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளனா் என்றாா் அவா்.
முன்னதாக, அவா்கள் எவரெஸ்ட் சிகரத்தை கடந்த மே மாதம் 29-ஆம் தேதி அடைந்தனா். பின்னா், தௌலகிரி, கஞ்சன்ஜங்கா, அன்னப்பூா்ணா, ஜி-1, ஜி-2 உள்ளிட்ட மலைச் சிகரங்களில் அவா்கள் ஏறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.