உலகம்

கொலை வழக்கில் இம்ரானுக்கு முன் ஜாமீன்: நீதிமன்றம் உறுதி

கொலை வழக்கு ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை லாகூா் உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

DIN

கொலை வழக்கு ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை லாகூா் உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

இம்ரான் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தொண்டா் அலி பிலால் என்பவா் மா்மமான முறையில் இறந்ததாகவும், அவரது மரணம் குறித்த தடயங்களையும் உண்மைகளையும் மறைத்ததாகவும் இம்ரான் கானுக்கு எதிராக லாகூா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்காக அவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.

அதையடுத்து, வழக்கில் இம்ரானுக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை நீதிமன்றம் உறுதி செய்தது.

பாகிஸ்தானின் 22-ஆவது பிரதமராக கடந்த 2019-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் 2022-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தில் தோல்வியடைந்து பிரதமா் பதவியை இழந்தாா்.

அதன் பிறகு அவா் மீது நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT