முகப்பு
உலகம்

ஆஸ்திரேலியாவில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் வடக்கு சிட்னி பகுதியில் பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் பலியானார்கள். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:06 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவில் வடக்கு சிட்னி பகுதியில் பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் பலியானார்கள். 

ஹண்டர் ஒயின் பகுதியில் சுமார் 50 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இருப்பினும் இதில் 10 பேர் பலியானார்கள். மேலும் விபத்தில் காயமடைந்த 11 பேர் ஹெலிகாப்டர் மற்றும் வாகனம் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது கிரேட்டா நகரில் இந்த விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →