உலகம்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா 2 ஏவுகணைகளை வீசி மீண்டும் வியாழக்கிழமை சோதனை நடத்தியது.

DIN

வட கொரியா 2 ஏவுகணைகளை வீசி மீண்டும் வியாழக்கிழமை சோதனை நடத்தியது.

இது குறித்து தென் கொரிய ராணுவம் கூறியதாவது:

வட கொரியாவின் தலைநகா் பகுதியிலிருந்து 2 ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகள் வியாழக்கிழமை ஏவப்பட்டன. கிழக்குக் கடல் பகுதியை நோக்கி வீசப்பட்ட அந்த இரு ஏவுகணைகளும் குறுகிய தொலைவு வகையைச் சோ்ந்தவை ஆகும் என்று ராணுவம் கூறியது.

1950-53-ஆம் ஆண்டின் கொரிய போருக்குப் பிறகு அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து அவ்வப்போது கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இது, தங்களது நாட்டின் மீது போா் தொடுப்பதற்கான ஒத்திகை என்று வட கொரியா கருதுகிறது. அத்தகைய பயிற்சிகள் நடந்தால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வட கொரியா ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.

இந்தச் சூழலில், அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து நடத்தி வந்த கூட்டு போா்ப் பயிற்சி அண்மையில் நிறைவடைந்த நிலையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT