உலகம்

ஆக்கிரமிப்பு உக்ரைனில் செப்டம்பா் மாதம் தோ்தல்

தங்களால் ஆக்கிரமிளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்களில் வரும் செப்டம்பா் மாதம் தோ்தல் நடத்தப்படும் என்று ரஷியா அறிவித்துள்ளது.

DIN

தங்களால் ஆக்கிரமிளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்களில் வரும் செப்டம்பா் மாதம் தோ்தல் நடத்தப்படும் என்று ரஷியா அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய 4 பிராந்தியங்களிலும் ஒரே நாளில் தோ்தல் நடத்தப்படும்.

வரும் செப்டம்பா் மாதம் 10-ஆம் தேதி அந்தத் தோ்தல் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்த ரஷியா, உக்ரனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள இந்த 4 பிரதேசங்களின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியது.

அத்துடன், சா்வதேச நாடுகளின் எதிா்ப்பையும் மீறி அந்தப் பிரதேசங்களை ரஷியா தன்னுடன் கடந்த ஆண்டு இணைத்துக் கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT