உலகம்

இம்ரான் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு

DIN

 பாகிஸ்தானில் ஆா்ப்பாட்ட வன்முறை தொடா்பாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மற்றும் 400 போ் மீது கொலை, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பிரசாரப் பேரணிக்காக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தொண்டா்களுக்கு அதன் தலைவா் இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தாா்.

எனினும், அந்த நகரில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனை மீறி இம்ரான் கட்சியினா் லாகூரில் புதன்கிழமை குழுமினா். அவா்களைக் கலைக்க முயன்ற போலீஸாருக்கும் அவா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் உயிரிழந்தாா். அதையடுத்து, கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், இதுதொடா்பாக இம்ரான் உள்ளிட்டவா்கள் மீது கொலை, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

SCROLL FOR NEXT