முகப்பு
உலகம்

நேபாளத்தில் இளைஞரின் வயிற்றில் வோட்கா பாட்டில்: அதிர்ந்த மருத்துவர்கள்

நேபாளத்தில் 26 வயது இளைஞரின் வயிற்றில் இருந்த வோட்கா பாட்டிலைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

Updated On : 10 மார்ச், 2023 at 9:52 PM
பகிர்:

நேபாளத்தில் 26 வயது இளைஞரின் வயிற்றில் இருந்த வோட்கா பாட்டிலைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

நேபாளத்தில் குஜாரா நகராட்சியைச் சேர்ந்த நுர்சத் மன்சூரி என்பவருக்கு அண்மையில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவருடைய வயிற்றில் வோட்கா பாட்டில் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

Advertisement

பின்னர் இரண்டரை மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு மன்சூரி வயிற்றில் இருந்த வோட்கா பாட்டிலை வெற்றிகரமாக அகற்றினர். பாட்டில் அவரது குடலைத் துண்டித்து மலம் கசிவு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தியதாகவும், இருப்பினும் அவர் தற்போது அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். 

மன்சூரி நண்பர்கள் அவரைக் குடிக்க வைத்துவிட்டு, மலக்குடல் வழியாக பாட்டிலை வயிற்றில் வலுக்கட்டாயமாக திணித்திருக்கலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஷேக் சமீம் என்பரை காவல்துறையினர் கைது செய்ததோடு மன்சூரியின் நண்பர்கள் சிலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.