முகப்பு
உலகம்

பைசாபாத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு

ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். 

ஆப்கானிஸ்தான் பைசாபாத் நகருக்கும் தெற்கே 101 கி.மீ தொலைவில் வெள்ளிக்கிழமை காலை 7.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. 

முன்னதாக, பைசாபாத் மற்றும் தஜிகிஸ்தான் நாட்டின் முக்கோப் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பைசாபாத்தில் 6.7 ரிக்டர் அளவிலும், முர்கோப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. 

இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். 

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு, சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.