உலகம்

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

DIN

துருக்கியின் கோக்சன் மாவட்டத்தின் தென்மேற்கில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

கோக்சன் மாவட்டத்தின் தென்மேற்கே 6 கி.மீ தொலைவிலும், 7 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது. 

முன்னதாக பிப்ரவரி மாதத்தில் சிரியாவை தாக்கிய நிலநடுக்கதின் பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 

இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT