உலகம்

குழந்தைகளின் கல்லறை காஸா: ஐ.நா.

இஸ்ரேலின் தாக்குதலால் காஸா நகரம் குழந்தைகளின் கல்லறையாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார். 

DIN

இஸ்ரேலின் தாக்குதலால் காஸா நகரம் குழந்தைகளின் கல்லறையாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. இஸ்ரேல் ராணுவம் காஸாவில் தரைவழித் தாக்குதலை நடத்தி வருகிறது.

காஸாவில் மருத்துவமனைகள், அகதிகள் முகாம், மசூதிகள், தேவாலயங்கள், கடைகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இதனால், பாதுகாப்பற்ற சூழலே அங்கு நிலவுகிறது.

அதேவேளையில் காஸாவிலுள்ள ஹமாஸ் படையினர் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர். தாக்குதலிலிருந்து தப்பிக்கும் வகையில் மக்களை பயன்படுத்திகொள்வது முறையல்ல. இது மனிதத்தன்மையற்றது.

பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். தரைவழித் தாக்குதல் தொடங்கிய அக்டோபர் 27 முதல் இஸ்ரேல் ராணுவத்திலிருந்து 31 பேர் பலியாகியுள்ளனர் எனக் குறிப்பிட்டார். 

இருதரப்பினருக்கு இடையிலான போரில் இஸ்ரேலில் 1400 பேர் பலியாகியுள்ளனர். 240 பேர் பிணைக்கைதிகளாக்கப்பட்டுள்ளனர். காஸாவில் 10,328 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில், 4,237 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

SCROLL FOR NEXT