(கோப்புப்படம்) 
உலகம்

இத்தாலியில் படகு கவிழ்ந்து விபத்து: குழந்தை பலி, 8 பேர் மாயம்!

இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்ததில் 2 வயதுக் குழந்தை நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளது. 

DIN

இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்ததில் 2 வயதுக் குழந்தை நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளது. 

துனிசியாவின் துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸில் இருந்து 50-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோருடன் படகு புறப்பட்டுள்ளது. லம்பேடுசா தீவில் படகு திடீரென கவிழ்ந்தது. இதில் கப்பலில் இருந்து சிலர் நீந்தி கரைக்குச் சென்றுள்ளனர். மற்றவர்கள் கடலோர காவல்படை மற்றும் உள்ளூர் மீனவர்களால் மீட்கப்பட்டனர். 42 பேர் மீட்கப்பட்ட நிலையில் 8 பேர் மாயமாகியுள்ளனர். 

இந்த படகில் புர்கினா பாசோ, கினியா-பிசாவ் மற்றும் மாலி ஆகிய நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் பயணித்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலோர காவல் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

லம்பேடுசா என்பது இத்தாலியின் தெற்கே உள்ள தீவு ஆகும். இது பல ஆண்டுகளாகப் புலம்பெயர்ந்தோர் பெருமளவில் வருகை தரும் இடமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT