கோப்புப் படம் 
உலகம்

மலேசியாவுக்கு டிச. 1 முதல் விசா இல்லாமல் பயணிக்கலாம்!

மலேசியாவிற்குச் செல்லும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக புதிய நடைமுறை அறிமுகம் செய்வதாக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

DIN

டிசம்பர் 1ஆம் தேதிமுதல் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல்  மலேசியாவுக்கு பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மலேசியாவிற்குச் செல்லும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக புதிய நடைமுறை அறிமுகம் செய்வதாக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிட்டதாவது, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, சீனா மற்றும் இந்தியாவையும் சேர்ந்தோர் இனி விசா இன்றி மலேசியாவுக்குள் நுழையலாம்.

இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் விசா இன்றி 30 நாள்கள் வரை தங்கலாம். புதிய நடைமுறை அடுத்த மாதம் (டிச.1) ஒன்றாம் தேதிமுதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

விசா தேவையில்லை என்றாலும் பயணிகள் குற்றப்பின்னணி அல்லது வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனரா என்பதை அறியப் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படும். 

இந்தியாவை விட சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வர அதிக வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்காலி திரைப்பட ஒளிப்பதிவாளர் வீட்டில் சடலமாக கண்டெடுப்பு

நெல்லையில் கனமழை: உதவி எண்கள் அறிவிப்பு!

நைஜீரியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட மாணவர்களில் 50 பேர் தப்பினர்

எஸ்ஐஆர் பணி: இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வருகை!

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து

SCROLL FOR NEXT