வேதியியலுக்கான நோபல் பரிசு 
உலகம்

வேதியியலுக்கான நோபல் பரிசு: 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு

குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN


ஸ்டாக்ஹோம்: குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாதெமி வெளியிட்ட  அறிவிப்பில், நடப்பாண்டுக்கான நோபல் பரிசு, 3 வேதியியல் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த மௌங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகிய மூன்று விஞ்ஞானிகள், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று குவாண்டம் புள்ளிகள் நானோ தொழில்நுட்பத்தின் டூல் பெட்டியின் முக்கிய பகுதியாக உள்ளன. வேதியியலில் 2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் அனைவரும் நானோ உலகத்தை ஆராய்வதில் முன்னோடிகளாக இருந்துள்ளனர்.

குவாண்டம் புள்ளிகள் இப்போது க்யூஎல்இடி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கணினி திரைகள் மற்றும் தொலைக்காட்சித் திரைகளை ஒளிரச் செய்கின்றன. மேலும் உயிரி வேதியியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உயிரியல் திசுக்களை வரைபடமாக்க  இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

குவாண்டம் புள்ளிகள் மனித குலத்திற்கு மிகப் பெரிய பயனைத் தருகின்றன. எதிர்காலத்தில் அவை நெகிழ்வான எலக்ட்ரானிக்ஸ், சிறிய சென்சார்கள், மெல்லிய சூரிய மின்கலங்கள் மற்றும் தகவல்தொடர்புக்கு பங்களிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள் - எனவே இந்த சிறிய துகள்களின் திறனை நாங்கள் ஆராயத் தொடங்கினோம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நோபல் பரிசானது ஒரு மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.8.32 கோடி), சான்றிதழ் மற்றும் தங்கப் பதக்கமாகும். பரிசுத் தொகை மேற்கண்ட மூன்று விஞ்ஞானிகளுக்கும் சமமாகப் பகிா்ந்தளிக்கப்படவுள்ளது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமை அறிவிக்கப்படும். அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமையும் (அக். 9) அறிவிக்கப்படவுள்ளன.

நோபல் பரிசை நிறுவிய ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பா் 10-ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் நிகழ்ச்சியில் விஞ்ஞானிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிா்வாகிகள் 8 போ் மீதான வழக்கு தள்ளுபடி

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

SCROLL FOR NEXT