இஸ்ரேலுக்கு ஆயுதங்களுடன் வந்த அமெரிக்க போர் விமானம் அந்த நாட்டின் விமானப் படை தளத்தில் புதன்கிழமை தரையிறங்கியது.
இஸ்ரேல் நாட்டுக்குள் கடந்த சனிக்கிழமை அதிரடியாக நுழைந்த ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா நகரை இஸ்ரேல் தாக்கி வருகின்றது.
காஸாவில் உள்ள ஹமாஸ் படையின் ராணுவ தளம், ஹமாஸ் அதிகாரிகள் வீடுகள், வானொலி நிலையம் என இஸ்ரேல் படையினர் குண்டு மழை பொழிந்து வருகின்றனர்.
இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும், ஹமாஸுக்கு சில இஸ்லாமிய நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து ஆயுதங்களுடம் முதல் போர் விமானம் தெற்கு இஸ்ரேலில் உள்ள நெவாட்டிம் விமானப்படை தளத்தில் வியாழக்கிழமை தரையிறங்கியது.
ஆனால், விமானத்தில் அனுப்பப்பட்டுள்ள ஆயுதங்கள் குறித்த தகவலை இரு நாடுகளும் வெளியிடவில்லை.
அதேபோல், இஸ்ரேல் அருகே மெடிட்டரேனியன் கடல் பகுதியில் அமெரிக்காவின் ‘ஜெடால்டு போர்டு’ விமானம் தாங்கி போர்க் கப்பல் 8 குழுக்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு விமானம் தாங்கி போர்க் கப்பலை இஸ்ரேலுக்கு அனுப்பவும், ஆயுதங்களுடன் போர் விமானங்களை அனுப்பவும் அமெரிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ள நிலையில், ஹமாஸுடனான போர் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.