உலகம்

ஹமாஸின் முக்கிய தலைவர் ஒசாமா அல்-முசைனி கொலை

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு முக்கிய தலைவரான ஒசாமா அல்-முசைனி இஸ்ரேல் படைத் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை பலியானார்.

DIN

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு முக்கிய தலைவரான ஒசாமா அல்-முசைனி இஸ்ரேல் படைத் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை பலியானார்.

காஸாவிலிருந்து இஸ்ரேல் எல்லைக்குள் கடந்த 7-ஆம் தேதி புகுந்த ஹமாஸ் அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 1,400 பேரை படுகொலை செய்தனர்.

இதற்கு பதிலடியாக காஸா மீது 11-வது நாளாக இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகின்றது. மேலும், தரை வழியாக காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

இதற்கிடையே இஸ்ரேலின் மற்றோரு அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா படையினரையும் ஒடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் விமானப் படையின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு முக்கிய தலைவரான ஒசாமா அல்-முசைனி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர், ஹமாஸ் படையால் பிணையக் கைதிகளாக பிடித்து வரப்படுவர்களை கையாண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹமாஸ் படையினரை ஒடுக்குவதற்காக காஸா மீது இஸ்ரேல் நடத்தும் கடும் தாக்குதல் 11-வது நாளை எட்டியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT