எகிப்து செல்கிறார் பிரிட்டன் பிரதமர்!
போர் விரிவடைவதைத் தடுப்பது குறித்து பேச, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று எகிப்து செல்கிறார்.
இஸ்ரேல் சென்றுள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நேற்று (வியாழன்) இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மற்றும் அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்தித்து பேசியுள்ளார். இரண்டு நாள் பயணமாக அவர் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களை நேரில் சந்தித்து போர் குறித்து பேசி வருகிறார்.
பிரிட்டன் பிரதமர், இஸ்ரேல் தலைவர்களுடனான சந்திப்புகளின்போது, போர் மேலும் விரிவைடைவதைக் கட்டுபடுத்தவும் மக்கள் பலியாவதை முன்கூட்டியே தடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பயணத்திற்கு பிறகு சௌதி அரேபியா சென்ற ரிஷி சுனக், அந்நாட்டின் பட்டத்து இளவரசரும் பிரதம அமைச்சருமான முகமது பின் சல்மானைச் சந்தித்து பேசியுள்ளார்.
Advertisement
இதையும் படிக்க: இஸ்ரேலியர்களுக்கு அமெரிக்க விசாவில் தளர்வு
அந்தச் சந்திப்பின் போது, ``போர் விரிவடைவதைத் தடுப்பத்தில் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கும், காஸாவுக்கு தேவையான வாழ்வாதார உதவிகளை மேற்கொள்ளவும், நிலையான ஆதரவை இப்போதும் நீண்ட நாள் நோக்கிலும் அளிப்பதற்கு நாங்கள் உடன்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார் ரிஷி சுனக்.
அதைத் தொடர்ந்து எகிப்து செல்லும் ரிஷி சுனக், அந்த நாட்டின் தலைவர்களைச் சந்தித்து பேசவுள்ளார். இன்று பிற்பகலில் பாலஸ்தீன பிரதமர் முகமது அப்பாஸ் உடன் சந்திப்பு நிகழவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஸா மருத்துவமனை தகர்ப்பின் விளைவாக பாலஸ்தீன பிரதமர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்பை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.