முகப்பு
உலகம்

தீவிரவாதத்துக்கு ஆதரவா? ஹமாஸ் போர் குறித்த பதிவுக்கு நடிகை கைது!

இதற்கு முன்பு இஸ்ரேலை சேர்ந்த அரபு பாடகர் தலால் அபு அம்னேஹ், சமூக வலைதள பதிவுக்காக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:13 AM
மைசா அப்தெல் ஹாடி
பகிர்:


இஸ்ரேல் - ஹமாஸ் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக அரபு நடிகையை இஸ்ரேல் அரசு கைது செய்துள்ளது. சமூக வலைதளத்தில் தீவிரவாதத்துக்கு ஆதரவாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பதிவிட்டதாக இஸ்ரேல் அரசு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அரபு நடிகை மைசா அப்தெல் ஹாடி, வடக்கு இஸ்ரேலின் நஸாரெத் பகுதியில் வசித்து வருகிறார். அந்நாட்டுத் திரைத்துறையில் வளர்ந்துவரும் நடிகையான அப்தெல் ஹாடி, இஸ்ரேல் - ஹமாஸ் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

அக்டோபர் 7ஆம் தேதி காலை இஸ்ரேல் எல்லைப் பகுதிகளைக் குறிவைத்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில், 1,400 பேர் இறந்ததாக இஸ்ரேல் அரசு குறிப்பிடுகிறது. 

அக்டோபர் 7 தாக்குதல் குறித்து பதிவிட்டிருந்த அப்தெல் ஹாடி, இஸ்ரேல் - காஸா எல்லையில் இருக்கும் புல்டோசர் படத்தைப் பகிர்ந்து, பெர்லின் மாடலில் செல்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 1989ஆம் ஆண்டு பெர்லின் சுவர் ஜெர்மனியால் தகர்க்கப்பட்டது. இதனால், இது ஹமாஸ் படையினருக்கு ஆதரவான பதிவாக கருதப்படுகிறது. 

இதனால், அவரை கைது செய்த இஸ்ரேல் அரசு, வியாழக்கிழமை வரை சிறையில் வைக்க உத்தரவிட்டுள்ளது. 

இதற்கு முன்பு இஸ்ரேலை சேர்ந்த அரபு பாடகர் தலால் அபு அம்னேஹ், சமூக வலைதள பதிவுக்காக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →