உலகம்

சீனாவில் கனமழை: 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

சீனாவில் பெய்துவரும் கனமழையால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 

DIN

சீனாவில் பெய்துவரும் கனமழையால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 

கடந்த 3 நாள்களுக்கு முன்பு தைவானில் கரையை கடந்த ஹைகுய் சூறாவளிப் புயல் சீனாவின் தென் கிழக்கில் அமைந்துள்ள புஜியான் மற்றும் கவுகாங்டாக் மாகாணங்களில் கோரதாண்டம் ஆடி வருகிறது. 

புயல் காரணமாகவும் கனமழை தொடர்வதாலும் சாலைகள் முழுவதும் காட்டாறுகளாக மாறியுள்ளன. வீடுகளில் வெள்ளநீர் புகுந்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குவாங்டாங் மாகாணத்தில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஷென்சென், ஜுஹாய் மற்றும் ஜியாங்மென் நகரங்களிலும், ஃபோஷன், டோங்குவான் மற்றும் குவாங்சோவின் சில பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குவாங்டாங் மாகாண வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT