முகப்பு
உலகம்

நேபாள நிலநடுக்கத்தில் பலி 128 ஆக உயர்வு!

நேபாளத்தின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 4 நவம்பர், 2023 at 11:41 AM
பகிர்:

நேபாளத்தின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. 

நேபாளத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு 11.32 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. ஜாஜர்கோட்டில் உள்ள லாமிடாண்டா பகுதியில் மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு நேபாளத்தின் ஜஜர்கோட் மற்றும் ருகும் மாவட்டங்களில் 140-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 

Advertisement

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.