மியான்மரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு!
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் இன்று (அக்டோபர் 23) காலை 6.29 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் மியான்மர் தலைநகர் நேய்பிடாவில் இருந்து 90 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல்கள் வெளிவரவில்லை.
முன்னதாக, நேபாளத்தில் நேற்று (அக்டோபர் 22) காலை 7.24 மணிக்கு 5.3 ரிக்டர் அளவிலும், மாலை 5.18 மணிக்கு 4.3 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
Advertisement
இதையும் படிக்க: சேரன் படத்தில் இணையும் கேஜிஎஃப் பட நாயகி!
இதனையடுத்து, ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவு 11 மணியளவில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.