இஸ்ரேல்- ஹமாஸ் போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
அக்.7 ஹமாஸ் இஸ்ரேலில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் ஆரம்பித்த போர் ஆறுமாத காலமாகத் தொடர்ந்து வருகிறது.
33,037 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்ததாகவும் 75,668 பேர் காயமுற்றதாகவும் காஸாவில் ஆட்சி நடத்திவரும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
கடந்த 24 மணி நேரத்தில் காஸா மருத்துவமனைகளுக்கு 62 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 91 பேர் காயமுற்று சிகிச்சைக்கு வந்துள்ளனர்.
புதன்கிழமை தெற்கு காஸா நகரான ராபாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இரண்டு வீடுகள் தகர்க்கப்பட்டன.
3 குழந்தைகள், 2 பெண்கள் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாக மருத்துவமனை பதிவுகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.