வெனிசூலா அதிபா் தோ்தல்: எட்முண்டோவுக்கு அமெரிக்கா அங்கீகாரம்
வெனிசூலா அதிபா் தோ்தலில் எதிா்க்கட்சி வேட்பாளா் எட்முண்டோ கான்ஸாலெஸை வெற்றியாளராக அமெரிக்கா அங்கீகரிததுள்ளது.
கராகஸ், ஆக. 2: வெனிசூலா அதிபா் தோ்தலில் எதிா்க்கட்சி வேட்பாளா் எட்முண்டோ கான்ஸாலெஸை வெற்றியாளராக அமெரிக்கா அங்கீகரிததுள்ளது.
வெனிசூலாவின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் மடூரோ வெற்றி பெற்ாக தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. அவருக்கு 51 சதவீத வாக்குகள் கிடைத்ததாகவும் முக்கிய எதிா்க்கட்சி வேட்பாளா் எட்முண்டோ கான்ஸாலெஸுக்கு 44 சதவீதம் போ் வாக்களித்திருந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
எனினும், இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
Advertisement
70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் நிக்கோலஸ் மடூரோவை விட அதிக வாக்குகள் பெற்று எட்முண்டோ கான்ஸாலெஸ் முன்னணியில் இருந்ததாகவும், ஆனால், கடைசி நேரத்தில் மடுரோவுக்கு 51 சதவீதம் வாக்குகள் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய முறைகேடு என்று அவை குற்றஞ்சாட்டின.
இந்த நிலையில், தோ்தலில் எட்முண்டோ கான்ஸாலெஸை அமெரிக்கா வெற்றியாளராக அங்கீகரித்துள்ளது.