முகப்பு
உலகம்

சீனத்தைத் துரத்தும் நெடுஞ்சாலை பலிகள்!

சீனத்தில் 4 மாதங்களில் வானிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட நெடுஞ்சாலை விபத்துகளில் 80க்கும் மேற்பட்டோர் பலி

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 2:27 PM
பகிர்:

சீனத்தில் நிலச்சரிவால் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகினர்.

சீனத்தின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள கார்ஸ் பகுதி, இமயமலையின் அடிவாரத்தில் மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக, அப்பகுதியில் இருந்த வீடுகள் அழிக்கப்பட்டதுடன், நெடுஞ்சாலை பாலமும் இடிந்து விழுந்தது.

இந்த நிலச்சரிவில் சிக்கி, 2 பேர் உயிரிழந்ததுடன், 17 பேர் காணாமல் போயுள்ளனர்.

Advertisement

அதுமட்டுமின்றி, பாலத்தின்மீது சென்ற 3 வாகனங்களும் விபத்துக்குள்ளானது; இருப்பினும், 3 வாகனங்களில் பயணித்த 6 பேரில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.

சீனத்தில் கடந்த மே மாதத்தில், தெற்கு சீனித்தில் அதீத கனமழையின் காரணமாக, ஒரு நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.

அதற்கு அடுத்ததாக, ஜூலை மாதம் வடக்கு ஷான்க்ஸி மாகாணத்தில், மற்றொரு நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்ததில் 38 பேர் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.