முகப்பு
உலகம்

வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டுக்கு தீ வைப்பு!

வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்தாசா வீட்டுக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட், 2024 at 10:51 AM
பகிர்:

வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஸ்ரஃபி மோர்தாசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான வங்கதேச அவாமி லீக் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான இவர், கட்சியின் கொறடாவாக செயல்பட்டு வந்துள்ளார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்து வெளியேறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில், வங்கதேசத்தின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மஸ்ரஃபி பின் மோர்தசாவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் சேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் அமைதியின்மை வெடித்தது. மோர்டாசாவின் வீட்டைக் குறிவைத்து, போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர்.

அவர் 2018 இல் அவாமி லீக்கில் சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். தற்போது குல்னா பிரிவில் உள்ள நரைல்-2 தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் மோர்தசா, ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக்கின் வேட்பாளராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இவர் கட்சியின் கொறடாவாகவும் செயல்பட்டு வருகிறார்.

36 டெஸ்ட், 220 ஒருநாள், 54 டி20 போட்டிகளில் 390 விக்கெட்டுகளையும், 2955 ரன்களையும் குவித்துள்ள மோர்தசா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 117 சர்வதேசப் போட்டிகளில் வங்கதேச அணிக்கு கேப்டனாகவும் இருந்தார்.

கலவரத்தில் மாவட்ட அவாமி லீக் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டதோடு, அவாமி லீக் மாவட்டத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸின் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. நாராயண்கஞ்சில், நாராயண்கஞ்ச்-4 எம்.பி.யான ஷமிம் உஸ்மானின் வீடு தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. கொமிலாவில், கொமிலா-6 (சதர்) தொகுதியின் எம்.பி.யான ஏ.கே.எம்.பஹாவுதீன் பஹாரின் வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல் தீ வைத்தது.

மஸ்ரஃபி மோர்தசாவின் வீடு தீவைத்து எரிக்கப்படங்களை வங்கதேச பயனாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments