பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் AP
உலகம்

பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது!! நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி!

பிரான்ஸ் அரசு கவிழ்க்கப்பட்டது பற்றி...

DIN

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்தது.

பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதால், அதிபர் இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சில நாள்களுக்கு முன்னதாக 2025-ஆம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், அதிபர் இமானுவேல் மேக்ரானின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பட்ஜெட்டை நிறைவேற்றுவேன் என்று பிரதமர் பார்னியர் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் பார்னியரின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரதமர் பதவியை பார்னியர் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

3 மாதத்தில் கவிழ்ப்பு

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிபர் இமானுவேல் நடத்தினார். இதில், தேசிய பேரணிக் கட்சி வெற்றி பெற்றது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் பார்னியர் பிரதமராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், பிரதமராக பார்னியர் பதவியேற்று மூன்று மாதங்களிலேயே அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் வரலாற்றில் முதல்முறையாக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்று ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT