முகப்பு
உலகம்

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: அமெரிக்கர்களிடம் கருத்துக்கணிப்பு!

அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 50% பேர் இஸ்ரேல் அத்துமீறுவதாகத் தெரிவித்துள்ளனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 6:42 PM
பகிர்:

இஸ்ரேல் ஹமாஸ் இடையே மூன்று மாதகாலமாக நடந்துவரும் போர் தொடர்பாக பொதுவிவகார ஆராய்ச்சிக்கான அசோசியேட் பிரஸ் - என்ஓஆர்சி மையம்  அமெரிக்கர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. 

அந்தக் கருத்துக்கணிப்பில் 50% அமெரிக்க வயதுவந்தோர், போரில் இஸ்ரேல் அத்துமீறுவதாகத் தெரிவித்துள்ளனர். இந்தப் போரில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்கள் எல்லை மீறியிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். 

இது அமெரிக்காவின் மீத 50% மக்கள் இஸ்ரேல் செய்வது தவறில்லை என நினைப்பதைக் காட்டுகிறது. மேலும், மொத்த வயதுவந்தோரில் 50% பேர் இந்த போர் மத்திய கிழக்கு பகுதிகளில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என நம்புகின்றனர். 

Advertisement

இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதல்களில் காஸா மண்ணில் ரத்தம் காய்ந்தபாடில்லை. அத்தியாவசியத் தேவைகளுக்குகூட அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் காஸா மக்கள் தினமும் உயிரிழக்கின்றனர். 

இதுவரை 27,000த்திற்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்துள்ளது. அதில் 11,000-த்திற்கும் அதிகமானோர் குழந்தைகள் எனக் கண்ணீர் விடுகிறது காஸா சுகாதார அமைச்சகம். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.