புளோரிடாவில் குடியிருப்பு மீது விமானம் விழுந்து தீப்பிடித்தது 
உலகம்

புளோரிடாவில் குடியிருப்பு மீது விமானம் விழுந்து தீப்பிடித்தது: பலர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் புளோரிடாவில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியின் மேல் விழுந்து தீப்பிடித்ததில் பலர் உயிரிழந்திருப்பதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

DIN

அமெரிக்காவின் புளோரிடாவில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியின் மேல் விழுந்து தீப்பிடித்ததில் பலர் உயிரிழந்திருப்பதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தென்கிழக்கு அமெரிக்க மாகாணம் புளோரிடாவின் கிளியர்வாட்டர் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று வியாழக்கிழமை இரவு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, புளோரிடாவின் மொபைல் குடியிருப்பு பகுதியில் விழுந்து தீப்பிடித்தது. 

பீச்கிராஃப்ட் பொனான்சா வி35 என்ற சிறிய ரக விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு, விமானி செயின்ட் பீட்-கிளியர்வாட்டர் சர்வதேச விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு அவசர நிலையை அறிவித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். 

குடியிருப்பின் மீது விமானம் விழுந்ததில் மூன்று வீடுகள் தீயில் எரிந்து சேதமானதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த விமான விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை, விபத்து தொடர்பாக மத்திய புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT