முகப்பு
உலகம்

நியூயார்க்கில் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

Updated On : 13 பிப்ரவரி, 2024 at 10:04 AM
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நியூயார்க்கின் மவுண்ட் ஈடன் ரயில் நிலையம் - படம் : ஏபி
பகிர்:

நியூயார்க்கின் ப்ரான்க்ஸ் ரயில் நிலையத்தில் மர்மநபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரயில் நிலைய பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் காயமடைந்தனர்.

ப்ரான்க்ஸ் பகுதியில் உள்ள மவுண்ட் ஈடன் ஏவ் ரயில் நிலையத்தில் நேற்று(பிப்.12) மாலை 4.30 மணியளவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். அதில் 34 வயதான நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் அவருக்கும் அங்கிருந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ரயில் நிலையத்தில் இறங்கியதும் அந்த நபர் தன் கையிலிருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.