எவான் கொ்ஷ்கோவிச் 
உலகம்

அமெரிக்க செய்தியாளரின் காவல் நீட்டிப்பு

உளவு குற்றச்சாட்டில் ரஷியாவால் கைது செய்யப்பட்ட அமெரிக்க செய்தியாளர் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

ரஷியாவின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள நீதிமன்றம், உளவுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமெரிக்க செய்தியாளரின் சிறைக் காவலை மார்ச் இறுதி வரை நீட்டித்துள்ளது.

எவான் கொ்ஷ்கோவிச், அமெரிக்காவின் வால் ஸ்டீரிட் நிறுவனத்தின் செய்தியாளரான இவர் 2023 மார்ச் மாதம் ரஷியாவில் உளவு பார்த்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார்.

இந்த குற்றச்சாட்டை எவான் கொ்ஷ்கோவிச்சும், வால் ஸ்டீரிட் செய்தி நிறுவனமும் அமெரிக்க அரசு அதிகாரிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

முன்னதாக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தாங்கள் எவானை விடுவிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், அரசின் ரகசிய தகவலை பெற முயன்ற போது கையும் களவுமாக எவான் பிடிபட்டதாகவும் இந்த சிறப்பு சேவை எட்டப்பட சில நிபந்தனைகள் உள்ளன எனவும் உடன்படிக்கை எட்டப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதின் மறைமுகமாக குறிப்பிடுவது அமெரிக்காவின் நட்பு நாடான ஜெர்மனியில் சிறையில் உள்ள ரஷியரை விடுவிக்கத் தான் எனக் கூறப்படுகிறது.

உக்ரைன் போா் விவகாரத்தில் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷியாவுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில் அமெரிக்க செய்தியாளா் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போர் நிறுத்த முதல்படி..! அமைதிப் பேச்சுவார்த்தை பணிகளைத் தொடங்கிய டிரம்ப்!

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

திருவள்ளுவா் பல்கலை.யில் இன்று பட்டமளிப்பு விழா

திருவள்ளூா்: குறைத்தீா் கூட்டத்தில் 362 மனுக்கள்

SCROLL FOR NEXT