உலகம்

ஜப்பான் நிலநடுக்கம்: இந்திய தூதரகத்தின் உதவி எண்கள்!

DIN

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய தூதரகத்தின் சார்பில் அவசர கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் மேற்குப் பகுதியில் இன்று பகல் 12 மணிக்கு மேல் ரிக்டர் அளவில் 3.5 முதல் 7.6 வரை அடுத்தடுத்து 20-க்கும் அதிக முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் உணரப்பட்டுள்ள நிலையில், இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமகட்டா மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்டடங்களும், சாலைகளும் நிலநடுக்கத்தில் சேதமடைந்துள்ள நிலையில், உயிர் சேதங்கள் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஜப்பானில் இருக்கும் இந்தியர்களின் உதவிக்காக இந்திய தூதரகம் சார்பில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூர் அரசாங்கத்தின் அறிவுரைகளை கண்காணித்து நடக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓங்காரக் குடில் ஆறுமுக அரங்கமகா சுவாமிகள் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வளா்ப்பு நாய் கடித்து மேலும் ஒருவா் காயம்

இளைஞா் உறுப்புகள் தானம்: சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு

ஆவணங்களில் உள்ள தகவல்களை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும்: பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி

போலி ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்திய குடிநீா் நிறுவனம்: ரூ. 2 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT