பாகிஸ்தானில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று (ஜன.11) பிற்பகல் 2.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | ராமர் கோயில் திறப்பு விழா ஆன்மீக நிகழ்வாக இல்லாமல் அரசியல் நிகழ்வாக நடத்தப்படுகிறது: சித்தராமையா
ஹிந்துகுஷ் மலைப்பகுதிகளில் 213 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.