உலகம்

துண்டிக்கப்பட்ட தந்தையின் தலையுடன் விடியோ: மகன் கைது!

DIN

அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த இளைஞர் தந்தையைக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பக்ஸ் மாகாணத்தில் உள்ள மிடில்டவுன் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞரின் தந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 

சமூக வலைதளத்தில் வெளியான விடியோவில் மேற்குறிப்பிட்ட இளைஞர், அவரது தந்தையின் துண்டிக்கப்பட்ட தலையோடு இருந்ததாக தெரிகிறது.

32 வயதான ஜஸ்டின் மோஹ்ன் என்கிற இளைஞரைக் காவலர்கள் அவரது அலைபேசி இருப்பிடத்தின் உதவியோடு கண்டறிந்து கைது செய்தனர்.

ஆயுதங்கள் வைத்திருந்த குற்றமும் சேர்க்கப்பட்டு பிணையில் வெளிவர இயலாத வகையில்  அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் வெளியான விடியோ ஜஸ்டினே பகிர்ந்துள்ளதாக தெரிகிறது. அந்த காணொலியில் அவர் கையில் இருப்பது தந்தையின் தலை என்றும் அவர் அதில் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நீதிமன்ற விசாரணை பிப்.8-ல் நடைபெறவுள்ளதாக அமெரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவின் வெற்றிக்கான தாரக மந்திரத்தைப் பகிர்ந்த நிதீஷ் ராணா!

மஹிக்காக.. ஜான்வி கபூர்!

6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு!

அன்னைகளால் நிறைந்த உலகம்..

SCROLL FOR NEXT