தென்கொரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய வடகொரியா!
வடகொரியா இரு ஏவுகணைகள் மூலம் தென்கொரிய கடற்கரைப் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் வடகொரியா இரு ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
முதல் ஏவுகனை 600 கி.மீ பறந்ததாகவும், இரண்டாவது ஏவுகணை 120 கி.மீ பறந்ததாகவும் குறிப்பிடபட்டது. இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தாக்குதல் குறித்து மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கையாக கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடும் முடிவு எடுக்கப்பட்ட அறிவிப்பு வெளியாகி 2 நாள்களில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
Advertisement
அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் மூன்று நாடுகளின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி ஏவுகணைத் தாக்குதல் பாதுகாப்பு, நீர்மூழ்கி கப்பல் தடுப்பு மற்றும் கடற்படைத் தாக்குதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தென்கொரிய அரசியல் ஆர்வலர்கள் பலூன்களில் துண்டு பிரசுரங்களைக் கட்டி அனுப்பியதற்கு பதிலடியாக கடந்த சில வாரங்களில் வடகொரியாவில் இருந்து குப்பைகளை பலூன்களில் கட்டி தென்கொரிய எல்லைப் பகுதிகள் முழுக்க அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.