மாதிரி ப்டம் 
உலகம்

ஆயுத தொழிற்சாலையில் வெடிவிபத்து: 2 பேர் காயம், ஒருவர் மாயம்!

ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் காயம், ஒருவர் காணாமல் போனார்

DIN

தெற்கு அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது இருவர் காயமுற்றதாகவும் ஒருவர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்கன்சாஸ் தலைநகர் லிட்டில் ராக்குக்கு தெற்கில் 138 கிமீ தொலைவில் உள்ள கேம்டன் பகுதியில் அமைந்துள்ள ஜெனரல் டயானமிக்ஸ் ஆர்டனன்ஸ் தொழிற்சாலையில் இந்த வெடிவிபத்து புதன்கிழமை ஏற்பட்டதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோதனையின்போது ஏற்பட்ட தீ என முதலில் தெரிவித்த நிறுவனம் பின்னர் விபத்து என ஒத்துக்கொண்டது.

மீட்புப் படையினர் உதவியுடன் தொழிற்சாலையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நிறுவனம் ஈடுபட்டதாகவும் இருவர் காயமுற்றதையும் ஒருவர் மாயமானதையும் உறுதி செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வெடிவிபத்து நிகழ்ந்த தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT