முகப்பு
உலகம்

வலதுசாரிகளுக்கு எதிராக அமைந்த தேர்தல் முடிவுகள்: பிரான்ஸில் கலவரம்!

பிரான்ஸ் தேர்தல் கருத்துக்கணிப்புகள் எதிரொலி: கலவரம் மூண்டதால் பதற்றம்

Updated On : 8 ஜூலை, 2024 at 1:47 PM
- படம் | ஏபி
பகிர்:
Updated On : 8 ஜூலை, 2024 at 1:13 PM

பிரான்ஸ் தேர்தல் முடிவுகள் அறிவிப்பட்டுள்ள நிலையில், இடதுசாரி முன்னணி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையிலான செண்ட்ரிஸ்ட் கட்சி 2வது இடத்திலுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற வலதுசாரி கட்சிகள் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.

எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் பல ஆண்டுகளுக்கு பின் பிரான்ஸில் தொங்கு நாடாளுமன்றம் அமைய உள்ளது ஐரோப்பிய அரசியல் வரலாற்றில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

- படம் | ஏபி
Updated On : 8 ஜூலை, 2024 at 1:28 PM

இரண்டாம் உலகப்போருக்குப் பின் மீண்டும் பல ஆண்டுகள் கழித்து, பிரான்சில் வலதுசாரி சித்தாந்தங்களைப் பின்பற்றும் மரைன் லீ பென்னின் ‘தேசிய பேரணி கட்சி’ அதிகாரத்தை கைப்பற்றுமென்ற எதிர்பார்ப்பு பெரிதாக நிலவியது. அதன்படி, பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு ஜூன் 30-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘தேசியப் பேரணி’ முன்னிலை பெற்றது.

இதனிடையே, முடிவுகள் அறிவிப்படும் முன் தேர்தல் கருத்துக்கணிப்புகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், தேர்தல் கருத்துக்கணிப்புகளின்படி, இடதுசாரிக் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்குமென தெரிவிக்கப்பட்டது வலதுசாரி ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து பிரான்சின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றிரவு கலவரம் மூண்டது. தலைநகர் பாரிஸில் கலவரக்காரர்கள் சாலைகளில் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுப்படுத்தினர்.

Updated On : 8 ஜூலை, 2024 at 1:46 PM

தலைநகர் பாரிஸில் விரைவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், வரும் நாட்களில் இதுபோன்ற கலவரங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.