ஹமாஸ் அரசியல் குழுத் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் புதன்கிழமை கொல்லப்பட்டார்.
ஈரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.
ஈரான் நாட்டின் முக்கிய தலைவரான சையத் அலி ஹொசைனி கமேனியுடன் ஆலோசனை செய்த இஸ்மாயில், செவ்வாய்க்கிழமை பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில், தெஹ்ரானில் இஸ்மாயில் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து புதன்கிழமை காலை இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
இதனை இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் இஸ்மாயிலின் காவலர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு வருகை புரிந்த ஹமாஸ் தலைவரை நாட்டின் தலைநகரிலேயே வைத்து கொல்லப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.