ஆப்கனில் படகு கவிழ்ந்ததில் 20 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் 20 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான், நங்கர்ஹரில் உள்ள முகமந்த் தாரா மாவட்டத்தில் மோட்டார் படகு ஒன்று இன்று காலை 7:30 மணியளவில் கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் என 20 பேர் பலியானதாக தலிபான்களின் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள உடல்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று காமா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் மாயமான உடல்களை மீட்க சம்பவ இடத்திற்கு தலிபான் தலைமையிலான சுகாதார அமைச்சகம் மற்றும் பிற அதிகாரிகளின் அவசர உதவிக் குழுக்கள் விரைந்துள்ளனர்.
சம்பவத்தின்போது விபத்துக்குள்ளான படகில் பெண்கள், குழந்தைகள் உட்பட 25 பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.