எலான் மஸ்க் 
உலகம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எலான் எஸ்க் தெரிவித்துள்ளார்.

DIN

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எலான் எஸ்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் தள பதிவில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்களால் அல்லது செய்யறிவால்(ஏஐ) ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருந்தாலும், இன்னுமும் மிக அதிகமாகவே உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முதன்மை தேர்தல் வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்த சுயேச்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரின் பதிவை குறிப்பிட்டு எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.

ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் தனது எக்ஸ் பதிவில்,”போர்ட்டோ ரிக்கோவின் நடைபெற்ற முதன்மை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. அதிர்ஷ்டவசமாக, ஆவணங்கள் இருந்ததால் பிரச்னை கண்டறியப்பட்டு வாக்கு எண்ணிக்கைகள் திருத்தப்பட்டன” என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 15 பேர் பலி

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு!

பிகார் தேர்தல்: 24,000 தபால் வாக்குகள் நிராகரிப்பு

லவ் தீம்... நிஹாரிகா ரய்ஸாதா!

துபை விமான காட்சியில் எரிந்து விழுந்த இந்திய தேஜஸ் விமானம்!

SCROLL FOR NEXT