முகப்பு
உலகம்

பட்டினி ஆயுதமா? : இஸ்ரேலை விமர்சிக்கும் துருக்கி!

உணவுப் பஞ்சத்தை உயிரிழப்பு ஆயுதமாக்கும் நடவடிக்கை: துருக்கி கடும் கண்டனம்

Updated On : 1 மார்ச், 2024 at 10:10 AM
பகிர்:

உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிகழ்வுக்கு செளதி அரேபியா, எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகளைத் தொடர்ந்து துருக்கியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் 100-க்கும் அதிகமானோர் பலியாகியதாகவும் 700 பேர் காயமுற்றதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மனிதத்துக்கு எதிரான மற்றொரு குற்றம் இது என துருக்கி விமர்சித்துள்ளது. வியாழக்கிழமை பிற்பகுதியில் வெளியிட்ட குறிப்பில், பட்டினியை ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாகவும் சமீபத்திய தாக்குதல் பாலஸ்தீன இனத்தை அழிக்கும் இஸ்ரேலின் உள்நோக்கத்தைக் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளது.

பிராந்திய எல்லைத் தாண்டிய பின்விளைவுகளை உருவாக்கும் பேரழிவை இஸ்ரேல் காஸாவில் நிகழ்த்தி வருவதாகவும் இதனை நிறுத்த உலக நாடுகளுக்கு துருக்கி அழைப்பு விடுத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →