உலகம்

நேபாளம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா அரசு வெற்றி

நேபாளத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா அரசு வெற்றி பெற்றது.

DIN

நேபாள அரசு மீது இன்று கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசண்டா வெற்றி பெற்றார்.

நேபாள பிரதமராக 18 மாதங்களில் இன்று 4வது முறையாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை உறுதி செய்திரக்கிறார் பிரசண்டா.

நேபாளத்தில் பிரதமா் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) அரசில் அங்கம் வகித்து வந்த ஜனதா சமாஜ்வாதி கட்சி (ஜேஎஸ்பி) தனது ஆதரவை கடந்த வாரம் திரும்பப் பெற்றது. மேலும், கூட்டுறவு சங்கங்களின் நிதியில் முறைகேடு செய்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சா் ரபி லாமிச்சானே மீது எதிா்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் குற்றஞ்சாட்டி, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்தவிடாமல் தொடா்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது.

ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டால் 30 நாள்களில் பிரதமா் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி அதில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில், நாடாளுமன்றத்தில் பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நேபாள நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க மொத்தமுள்ள 275 உறுப்பினா்களில் 138 உறுப்பினா்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் 158 உறுப்பினர்கள் பங்கேற்றனர். முக்கிய எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த வெளிநடப்பு செய்துவிட்டது. ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாக்கெடுப்பில் பிரசண்டா வெற்றி பெற்றார்.

இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைப்பதை உறுதி செய்தார் பிரசண்டா.

கடந்த 2022, டிசம்பா் 25-ஆம் தேதி நேபாள பிரதமராக பிரசண்டா பதவியேற்றாா். தற்போது வரை அவா் அரசின் மீது நான்கு முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் மறைவு: முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 30 மாவட்டங்களில் மழை!

குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

பெத்தவேப்பம்பட்டு, கோவிந்தாபுரம் ஊராட்சிக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

SCROLL FOR NEXT