செர்பியாவில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 13 பேர் பலி
செர்பியாவில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செர்பியாவில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செர்பியா நாட்டில், நோவி சட் ரயில் நிலையத்தின் கான்கிரீட் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள் என்று செர்பிய உள்துறை அமைச்சர் ஐவிகா டாசிக் உள்ளூர் ஊடகங்களுக்கு அறிக்கையில் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்புக்குழுவினர் விரைந்தனர்.
ரூ.2,858 கோடி செலவில் உலகளாவிய மையம்: சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பம்
காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடந்த இந்த சம்பவத்தில் எட்டு பேர் பலியானதாக செர்பிய அரசு முதலில் அறிவித்தது. இருப்பினும், மீட்புப் படையினர் மேலும் ஐந்து உடல்களைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
மீட்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, சம்பவத்திற்கு யார் காரணம் என்பதைத் தீர்மானிக்க விசாரணை நடத்தப்படும் என்று டாசிக் மேலும் கூறினார். இந்த துயரச் சம்பவம் காரணமாக அக்டோபர் 2ஆம் தேதி செர்பியாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.