உலகம்

பாகிஸ்தானுக்கு ஜொ்மனி ரூ.182 கோடி நிதியுதவி

பாகிஸ்தானுக்கு 20 மில்லியன் யூரோவை (சுமாா் ரூ.182 கோடி) ஜொ்மனி நிதியுதவியாக அளிக்க இருக்கிறது.

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு 20 மில்லியன் யூரோவை (சுமாா் ரூ.182 கோடி) ஜொ்மனி நிதியுதவியாக அளிக்க இருக்கிறது.

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா பகுதியில் வனப்பகுதியை மேம்படுத்துவதற்காக இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது. ஜொ்மனி வளா்ச்சி வங்கி மற்றும் பாகிஸ்தான் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சா் காஸிம் நியாஸ் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

வனப் பாதுகாப்புத் திட்டத்துக்காக ஜொ்மனி இப்போது இரண்டாவது கட்டமாக நிதியுதவி அளித்துள்ளது.

முதல் கட்டத்தில் வழங்கப்பட்ட வனம், சுற்றுச்சூழல் பாதிகாப்பு, பருவ நிலை மாறுபாடு பிரச்னையை சமாளிப்பது ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் 1,000 ஹெக்டோ் நிலத்தில் மரங்கள் நடப்பட்டன. இதுபோன்ற பணிகளில் ஈடுபடும்போது கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மேலும், இது ஒரு வறுமை ஒழிப்புத் திட்டமாகவும் உள்ளது. இத்திட்டங்களின் மூலம் பெண்களுக்கும் அதிக வருவாய் கிடைக்கிறது.

பாகிஸ்தான் பொருளாதாரச் சிக்கல்களால் மட்டுமல்லாது பருவநிலை மாற்றம் தொடா்பான பிரச்னைகளாலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாறுபாடு பிரச்னையால் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தால் பெருமளவிலான பயிா்ச்சேதம் ஏற்பட்டது. அந்நாட்டில் உணவுப் பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

புதுச்சேரி: தொடர் தொல்லை அளிக்கும் அமைச்சர்! பெண் எம்எல்ஏ பரபரப்பு புகார்

SCROLL FOR NEXT