தி கார்டியன் 
உலகம்

எக்ஸ் தளத்தில் இருந்து விலகியது தி கார்டியன்

பிரிட்டனைச் சேர்ந்த நாளிதழ் நிறுவனமான தி கார்டியன், எக்ஸ் தளத்தில் இருந்து விலகியது.

DIN

பிரிட்டன் நாளிதழ் நிறுவனமான தி கார்டியன், எக்ஸ் (முந்தைய பெயர் ட்விட்டர்) சமூக வலைதளத்தில் இனி எந்தச் செய்திகளையும் பகிரபோவதில்லை என்று அறிவித்துள்ளது.

எக்ஸ் சமூக வலைதளத்தில் மிகக் கடுமையான வலதுசாரி சதி மற்றும் இனவெறி கருத்துகள் நிறைந்து உள்ளது என்றும் தி கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

எக்ஸ் தளத்திலருந்து வெளியேறுவதற்கான காரணத்தை விளக்கும் தி கார்டியனின் ஊடகப் பதிவில், "அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில், எக்ஸ் தளத்தின் நச்சுத்தன்மை கொண்ட கருத்துகள் தெளிவாக வெளிப்பட்டுள்ளது; அதன் உரிமையாளர் எலான் மஸ்க், எகஸ் பக்கத்தில் அரசியல் பிரசாரங்களை உருவாக்குவதற்கு தனது செல்வாக்கை பயன்படுத்தியுள்ளார்" என்ற குற்றசாட்டையும் தி கார்டியன் முன்வைத்துள்ளது.

மேலும், எக்ஸ் தளத்தில் இருந்த நன்மைகளை விட எதிர்மறைகளே அதிகமாக இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம், மேலும் எங்கள் பத்திரிகையை மற்ற இடங்களில் மேம்படுத்துவதற்கு சிறப்பான வாய்ப்புகளை பயன்படுத்தவிருக்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் சமூக வலைதளத்தில் தி கார்டியனை 10.7 மில்லியன் பயனாளார்கள் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எச்சரிக்கை! மால்வேர் தாக்குதல்கள் படுமோசம்!

கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழா நிறைவு: 14 கோயில்களின் தேர்கள் அணிவகுப்பு!

அமெரிக்காவின் அவமதிப்பை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள்! புதின்

முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

செங்கல்பட்டில் தசரா திருவிழா!

SCROLL FOR NEXT